(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1400பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு 3 மில்லியன் பெறுமதியான உணவுபொருட்கள் வழங்கி வைப்பு.நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு இப் பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.இவர்களு க்கான உதவிகளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நாடுபூராகவும் முன்னெடுக்கப் பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்வாறான அசாதாரண நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுபொதிகள் வழங்கும் நிகழ்வு அமெரிக்க மிசன் மண்டபத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்தி ஒன்றிய பணிப்பாளர் எச். ஏம் மொகமட் புகாரி தலைமையில் இடம்பெற்றது.
மாவட்டத்தின் 9 பிரதேச செயலக பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட1400 பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கும் விசேட தேவையுடைய குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு சுமார் 3000 ருபா பெறுமதியான மொத்தம் ரூபா 3 மில்லியன் பெறுமதியுள்ள உலர் உணவு பொதி வழங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் கலந்துகொண்டு இவ் உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்தார்.இந் நிகழ்வில் கிழக்கு மாகாண அபிவிருத்தி ஒன்றிய உத்தியேதகத்தர் பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.








Post A Comment:
0 comments so far,add yours