( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தில் கொடிய கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புதிய வளத்தாப்பிட்டி  கிராம மக்களுக்கு நேற்று அரசின் 5000ருபா பெறுமதியான  இரண்டாவது தனிமைப்படுத்தல்  உலருணவு நிவாரணப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சம்மாந்துறை பிரதேச செயலக ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் இவ்வுலருணவு விநியோகம் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அதிதியாகக்கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.


முதலாவது முடக்கலின்போது ஒரேயொரு உலருணவுத்தொகுதி அரசினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை கடந்த 21ஆம் தினதி இரண்டாவது முடக்கலும் விதிக்கப்பட்டு இரண்டு நாட்களில் மீண்டும் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இருந்தபோதிலும் அரசின் இரண்டாவது தனிமைப்படுத்தல் உலருணவுப்பொதி நேற்றே வருமானம் குறைந்த 152குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இஸ்மாயில்புரமக்களுக்கும் வழங்கிவைக்கட்டது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours