( வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உயரதிகாரியொருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதையடுத்து  பிரதேச செயலாளர் தொடக்கம் 57உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் உதவிதிட்டமிடல்அதிகாரி செல்வி எம்.அனோஜா உள்ளிட்ட 57 உத்தியோகத்தர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் எதிர்வரும் எட்டாம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை தொற்றுக்குள்ளான உயரதிகாரி தற்சமயம் பாலமுனை இடைத்தங்கல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதேசசெயலகத்தில் 58பேருக்கு அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது ஒருவரைத்தவிர ஏனையோருக்கு நெகட்டிவ் அதாவது n தாற்றில்லை என தெரியவந்தது.

எனினும் ஒருவர் தொற்றுக்குள்ளாகி இனங்காணப்பட்டகாரணத்தினால் அவருடன் பணியாற்றிய ஏனைய 57பேரையும் அவரவர் வீடுகளில் தனிமைபப்படுத்த சுகாதாரப்பகுதியினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
முக்கிய பொறுப்பபுக்களிலுள்ள பெரும்பாலான உத்தியோகத்தர்கள் இவ்விதம் தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்தபோதிலும் பிரதேச செயலகம் மூடப்படவில்லை.

மாறாக  நிருவாக உத்தியோகத்தர் பி.நடேசன் தலைமையிலான குழுவினர் அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours