( வி.ரி.சகாதேவராஜா)
தொடரும்; கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பசியைப்போக்க கனடா டொராண்டோ கஜூ அபி நற்பணிமன்றம் இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5000ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.ஒவ்வொருவரு க்கும் 25கிலோ அரிசி பால்மா உள்ளிட்ட உணவுவகைகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்து.
இந்த உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவுப் பொதிகளை நேற்று வழங்கிவைத்தார்.
மாற்றுத்திறனாளி அனுசியா தலைமையில் இடம்பெற்ற நிவாரணப்பணியை சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி வழங்கிவைத்தார்.
அங்குள்ள ருபன் உள்ளிட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் இப்பணிக்கு ஒத்துழைத்தனர்.





Post A Comment:
0 comments so far,add yours