மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 117கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பகுதியில் அதிகூடிய தொற்றாளர்களாக 32பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் காத்தான்குடியில் 30பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 08பெரும் வாழைச்சேனையில் 01,ஓட்டமாவடியில் 04பேரும்,கோறளைப்பற்று மத்தியில் 14பேரும்,செங்கலடியில் 08பேரும்,வவுணதீவில் 06பேரும்,கிரானில் 01,பொலிஸ் உத்தியோகத்தர்கள் 02பேர்,வேறு மாகாணத்திலிருந்து வந்தவர்கள் 02 என 117பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

சுகாதார நடைமுறைகளை பேணாமல் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளே தொற்று அதிகரிப்பதற்கான காரணம் எனவு; அவர் தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours