(காரைதீவு  சகா)


கல்முனைப்பிராந்தியத்திலுள்ள  பொத்துவில் சுகாதார அதிகாரிப் பிரதேசத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துவருகிறது. 

 அங்கு கடந்த இரு வாரங்களில் 170பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது  என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  பணிமனை தெரிவித்தது.


நேற்றுக்காலை நடாத்திய அன்ரிஜன் சோதனையின்போது 23பேர் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது பொத்துவில் 9(குண்டுமடு) கிராமசேவையாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ளது.

இதனால் அப்பிரிவை முடக்க கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேசிய கொவிட் செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

ஏலவே பொத்துவில் சுகாதாரப்பிரிவில்  13 ஆம் கிராம அலுவலர் பிரிவு முடக்க பட்டுள்ளது தெரிந்ததே.

அப் பகுதியில் உள்ள 94 வயதான நபர் நேற்று கொரனா தொற்றின் காரணமாக உயிர் இழந்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours