நூருல் ஹுதா உமர்
குவைத் நாட்டின் அல் - நஜாத் அறக்கொடை நிறுவனத்தின் நிதியுதவியுடன் இலங்கையிலுள்ள அந் - நூர் சரிட்டி சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுக்கு கட்டி முடிக்கப்பட்ட சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் பெருமதியுடைய வீடொன்று அட்டாளைச்சேனையில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அந் - நூர் சரிட்டி நிறுவனத்தின் தவிசாளர் எஸ்.எம். அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீட்டிற்கான நினைவுக்கல்லை திறந்து வைத்து உரிய குடும்பத்தினரிடம் உத்தியோகபூர்வமாக இவ்வீடு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இவ் அமைப்பின் முக்கியஸ்தர்கள் , அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .



Post A Comment:
0 comments so far,add yours