சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள ஏழு(7) அரச மற்றும் தனியார் வங்கிகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் 70பேருக்கு நேற்று(16)வெள்ளிக்கிழமை பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சம்மாந்துறை நகரிலுள்ள மக்கள்வங்கி ஹற்றன்நாசனல் வங்கி அமானாவங்கி தேசியசேமிப்புவங்கி கிராமியஅபிவிருத்திவங்கி சணசஅபிவிருத்திவங்கி செலான்வங்கி  ஆகிய  ஏழு வங்கிக்கிளைகளில் நேற்று பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சம்மாந்துறை   சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜ.எம்.கபீர்  தலைமையிலான சுகாதாரத்துறையினர்   சோதனை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.

மேற்பார்வை பொதுச்சுகாதாரபரிசோதகர் எஸ்.எ.றாசிக் பொதுச்சுகாதாரப்பரிசோதகர் முருகேசு ராஜ்குமார் உள்ளிட்ட குழுவினர் இச்சோதனை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இவர்களுக்கான பெறுபேறுகள் நாளை கிடைக்கப்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை காரைதீவு ஹற்றன் நாசனல் வங்கியின் பெண் ஊழியரொருவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. எனினும் அவர் கடந்த 10தினங்களாக வங்கிக்கு சமுகமளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours