(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 114 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 57 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்த இருவர் உட்பட  மொத்தமாக 114 பேருக்கு தொற்று  கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours