(வி.ரி.சகாதேவராஜா)


தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்   அம்பாறை மாவட்டத்திற்கான  32வது வீரமக்கள் தினம் முன்னணியின்  மாவட்ட அமைப்பாளர் தோழர் சங்கரி தலைமையில் நேற்று காரைதீவில் நடைபெற்றது.

சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைவாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமாகிய அமரர் . க.உமாமகேஸ்வரன் அவர்களுக்கும் இன்னுயிர் ஈந்த கழக கண்மணிகள்போராளிகள்பொது மக்களுக்கும் அஞ்சலி நிகழ்வு நடை பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில்   ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரான தோழர் கேசவன் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் முரளி மற்றும் தோழர் கங்கா ஆகியோர் சுடர் விளக்கேற்றி மலர் தூவி நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours