அனைவராலும்கடந்தசில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த கல்முனைப் பிராந்தியத்திற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள்  சனிக்கிழமை (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.குண. சுகுணன் தெரிவித்தார்.

இதற்கென 50ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் சனிக்கிழமை (24) முதல் சகல 13சுகாதாரப்பிரிவுகளிலும் ஏற்றப்பட்டு வருகிறது. முதல்நாளிலே சுமார் 20ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்ப்பட்டுள்ளன. திருக்கோவில் பகுதியில் அதிகூடிய ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளன என்றார்.

கல்முனைப்பிராந்தியத்திலுள்ள  13 சுகாதாரவைத்தியஅதிகாரிகள் பிரிவுகளிலுள்ள 07ஆதாரவைத்தியசாலைகளிலும் 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் சுகாதாரப்பிரிவினர் ஏற்படுத்தும் பாடசாலைகள் போன்ற விசேடமையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.

வைத்தியசாலைகளில் 60வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்கள் போன்றோருக்கு முதலில் செலுத்தப்பட்டன. முதற்கட்டமாக 30வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்....

முன் ஏற்பாட்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 30வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதாரஅலுவலகங்களில் பணியாற்றுவோர் வீட்டிலிருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகின்றன.

அதேவேளை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கிழக்குமாகாணமெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.

வைத்தியசாலைகள் சுகாதாரஅலுவலகங்கள் குறித்த நிலையங்கள் போன்றவற்றில் அவை வழங்கப்பட்டுவருகின்றன.இதுவரை பெறாதவர்கள்  அந்தந்த சுகாதாரவைத்தியஅதிகாரிகள பொதுசுகாதாரபரிசோதகர்கள் சுகாதார உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொண்டு அவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.



      உயர்மட்டஅதிகாரிகள்குழு கல்முனை விஜயம்!

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகூடிய கொவிட் தாக்கத்துக்குள்ளாகியிருக்கும் கல்முனைப்பிராந்தியத்திற்கு அவசரமாக சுகாதார அமைச்சின்     சுகாதார சேவை   பணிப்பாளர் நாயகம் தலைமையிலான சுகாதாரத்துறை உயரதிகாரிகள் குழு விஜயம்செய்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை  எடுத்துள்ளது.

இலங்கை சுகாதாரத்துறை நிருவாத்தில் உச்சக்கட்ட உயரதிகாரி விஜயம் செய்தமை பல ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்கு வழிவகுத்தது.

இதுவரைகாலமும்  அங்கு தடுப்பூசி கிடைக்கப்பெறவில்லையென  பலதரப்பினரும் ஊடகங்களில் குற்றம்சாட்டிவந்த தருணத்தில் இவர்களது விஜயம் அமைந்திருந்தது. அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை இந்ததடுப்பூசிவிவகாரத்தில் மூக்கை நுழைத்திருந்தனர். சிலர் தடுப்பூசி வரமுன்பே வந்ததாக நன்றியும் தெரிவித்து ஊடகஅறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். மக்களுக்கு அனைத்தும் விளங்கும் .

தடுப்பூசி விவகாரத்திற்கு அந்தஇடத்திலேயே தீர்வும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆம். சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலகுணவர்த்தன தலைமையிலான உயர்மட்ட சுகாதாரஅதிகாரிகள் குழுவினர் கல்முனைக்கு (18) ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தனர்.கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தலைமையில் நீண்டநேரம் கலந்துரையாடல் அவரது பணிமனையில் இடம்பெற்றது.


பிரதி சுகாதாரசேவைப்பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல்.பானப்பிட்டிய டாக்டர் சுதத் தர்மரத்ன உள்ளிட்ட குழுவினர் வருகைதந்திருந்தனர் கிழக்கு மாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் எ.ஆர்.எம்.தௌபீக் கலந்துரையாடலை நெறிப்படுத்தினார்.

கல்முனைப்பிராந்தியத்திற்கு 50ஆயிரம் சினோபாம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படுமென்று சுகாதார அமைச்சின் சுகாதாரசேவைபணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலகுணவர்த்தன கல்முனை விஜயத்தின்போது தெரிவித்தார்.


கல்முனைப்  பிராந்திய சுகாதார நிலைமை கொவிட் 19 பரம்பல் தடுப்பு முறைகள் பற்றி விலாவாரியாக கலந்துரையாடப்பட்டது.

இறுதியில் குழுவினர் கல்முனை ஆதாரவைத்தியசாலை கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலை அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆதாரவைத்தியசாலைகளுக்கும் விஜயம்செய்து சுகாதார செயற்பாடுகளை அவதானித்தனர்.
குழுவினர் கல்முனைப்பிராந்திய கொவிட் குழுவினரைப்பாராட்டி விடைபெற்றனர்.

கல்முனை ஆதார வைத்தியசாலை விஜயம் !

அதேவேளை சுகாதார அமைச்சின் பிரதிசுகாதாரசேவைபணிப்பாளர் நாயகம் டாக்டர் லால் பணபிட்டிய தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது.அன்றையதினம்  இவ்விஜயம் இடம்பெற்றது.

கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் விடுத்த வேண்டுகோளின்பேரில்  கல்முனைக்கு விஜயம் செய்த பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலகுணவர்த்தனவின் ஒருகுழுவினர் அங்கு விஜயம்செய்திருந்தனர்.

சுகாதார அமைச்சின் பிரதிசுகாதாரசேவைபணிப்பாளர் நாயகம் (மருத்துவசேவைகள்) டாக்டர் லால் பணபிட்டிய மருத்துவ வழங்கல்பிரிவு பணிப்பாளர் டாக்டர் கபில ஆய்வுகூட பணிப்பாளர் டாக்டர் விஜித குணசேகர உள்ளிட்ட உயர்மட்டக்குழுவினர் விஜயம்செய்தனர்.

அவர்கள் வைத்தியசாலையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் விசேடபிரிவைப் பார்வையிட்டு பூரண திருப்தியடைந்தனர். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு பராமரிப்பு சேவைகளை நேரடியாகக் கண்ணுற்று பாராட்டும் தெரிவித்தனர்.வைத்தியசாலை கவின்நிலை வழங்கப்படும் சுகாதாரசேவைகள் குழுவினரை வெகுவாகக்கவர்ந்தது.

இதன்போது வைத்திய நிபுணர்களின் தேவை ஆய்வுகூடவசதிகள் ஒட்சிசன் விநியோகம் தேவையான மருத்துவ உபகரணங்கள் பற்றி பூரண தகவல்களை எழுத்துமூலம் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் முரளீஸ்வரன் குழுவினரிடம் சமர்ப்பித்தார்.

தேவைகளை முடியுமானவரை பூர்த்தி செய்துதருவதாக குழுவினர் உறுதியளித்தனர்.

நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிவைத்தியஅத்தியட்சகர் டாக்டர் சோ.திருமால் தாதியபரிபாலகர் எஸ்.சஜிந்திரன் பிரதமமுகாமைத்துவஉதவியாளர் ரி.தேவஅருள் நிருவாக உத்தியோக்தர் எஸ்.கிருஸ்ணகுமார் பராமரிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சுந்தர் உள்ளிடடோரும் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
இத்துடன் மேலும் 3 வைத்தியசாலைகளும் விஜயம் செய்து சுகாதார பராமரிப்பு செயற்பாடுகளை குறிப்பாக கொவிட் சிகிச்சை முன்னெடுப்புகளை பார்வையிட்டு திருப்தி தெரிவித்துசென்றனர்.

(காரைதீவு   நிருபர் வி.ரி.சகாதேவராஜா)
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours