இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே வேளை அரசாங்கம் பாடசாலை நேர நீடிப்பை வாபஸ் பெற வேண்டும். இன்றேல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க வேண்டி நேரிடும் என அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்து ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.
பொதுவாக நோக்கினால் பாடசாலை நேரத்தை அரை மணிநேரம்
அதிகரித்தால் முழு கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.
அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தவும்வேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பாகும்.
அண்மையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய சென்ற இடமெல்லாம் கல்வி சீர்திருத்தம் மற்றும் பாடசாலை நேர மாற்றம் தொடர்பிலேயே உரையாற்றியிருந்தார்.
குறிப்பாக பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் எவ்வித பிரச்சனைகளும் தோன்றவில்லை என் பிரதமர் கூறியிருந்தார். மறுகணம் தொழிற்சாலைகள் அதற்கு பதிலாக நாம் எழுத்து மூலம் அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளன.
இந்த நிலை ஆரோக்கியமான ஒன்றல்ல.
அரசும் தொழிற்சங்கங்களும் விடாக்கொண்டன் கொடாக்கண்டன் நிலையில் இருந்து விடுபட்டு இதற்கு நியாயமான தீர்வு காண வேண்டும்.
பாடசாலை என்பது தனி ஒரு கல்விச் சமூகத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. பல சமூகங்களுடன் தொடர்பு பட்டவை. கல்வி அமைச்சு போக்குவரத்து துறை மட்டுமல்ல குடும்பம் என்பதால் சகல துறைகளிலும் சம்பந்தப்பட்டது பாடசாலை ஆகும்.
எனவேஅரசு கல்விச் சமூகம் மற்றும் பாடசாலை சார்ந்த சமூகங்கள் எதிர்நோக்கும் சவால்களை கருத்திற்கொண்டு முறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அரசின் தீர்க்கமான முடிவு!
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாங்கள் நிபுணர்கள் அல்ல; தேசிய கல்வி நிறுவனமே சீர்திருத்தங்களை வடிவமைக்கும். அதன் கொள்கைகளை மாற்ற முடியாது. ஏற்கனவே செலவு ஒதுக்கப்பட்டுள்ளது.' என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.
முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீடிக்கவிருந்தது. ஆனால்இ ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம்இ இந்தச் சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் இந்த புதிய கால அட்டவணையை எதிர்த்து வருகின்றன. எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்குள் அரசாங்கம் முன்மொழியப்பட்ட கால அட்டவணையைத் திருத்தாவிட்டால்இ புதிய பாடசாலைப் பருவம் தொடங்கும் போது ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சாதக பாதகங்கள்! பாடசாலை நேரத்தை அரை மணிநேரம்
அதிகரித்து பிற்பகல் 2 மணிவரை நீடிக்கஉள்ளது. இந்நிலையில் இந்த அரை மணிநேரநீடிப்பால்இ பல துறைகளைச் சேர்ந்தவர்களும் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுக்கநேரிடும்.பாடசாலைகளுக்குச் சென்று
திரும்புவதற்கு பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவோர்இ
பாடசாலை வாகனங்களைப்பயன்படுத்துவோர் மேலதிகமாக அரை
மணிநேரம் காத்திருக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள்
என்றால் தங்களுடைய மதிய உணவு நேரத்தில் பிள்ளை வீட்டுக்கு அழைத்துச்
சென்று விடுதல் பாதிக்கப்படும்.அதுமட்டுமன்றிஇ ரயில்களில் பயணிக்கும்
ஆசிரியர்கள் மாணவர்களும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படும். ஆகையால்தான் போக்குவரத்துக்குத்
தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைகள்
மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் பாடசாலை நேரத்தை30 நிமிடங்கள் நீடிக்க நடவடிக்கைஎடுத்தால் அதற்கான நியாயமான சம்பளஉயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.தற்போதைய பாடசாலை நேரம்
நீடிக்கப்படும் என்று கூறுவதன் மூலம் அவர்களுக்கு அதிக கடமைகள் மற்றும்
பொறுப்புகள் வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள்இ
அவர்களுக்கு ஒதுக்கப்பட்டபொறுப்புகளை நிறைவேற்றுவதில்
நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
'கற்பித்தல் நேரத்தை நீட்டிப்பதன்மூலம் முன்மொழியப்பட்ட திட்டத்தின்மூலம் அவர்கள் சில உற்பத்தித்திறனைஎதிர்பார்க்கிறார்கள். பாடசாலை நேரம்
ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்படும் என்று கூறுவதன் மூலம்
ஆசிரியர்கள் மாதத்திற்கு இருபது சேவை நாட்களை உள்ளடக்கும்போது மாதத்திற்குக் கூடுதலாக பத்து மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த வழியில் இது ஆசிரியர்களின் சம்பளத்தில்நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.' என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
அதுமட்டுமன்றி பாடசாலை நிறைவடைந்து மேலதிக வகுப்புகள்இ
தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களும் பெரும் சிரமங்களுக்கு
முகங்கொடுக்கவேண்டிய நிலைமைஏற்படும். ஆகையால்இ பாடசாலை
நிறைவடைந்து இன்னும் இரண்டொரு மணிநேரத்துக்குப் பின்னரான பயண
ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்தை
மறுசீரமைக்கவேண்டும்.தேவேளை பெரும்பாலான அரச
பேருந்துகள்சீருடைகளில் நிற்கும் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை.
அத்துடன் பல தூரபிரதேசங்களில் அரச பேருந்து போக்குவரத்து ஒழுங்குமுறையில்இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
குற்றச்சாட்டுகள் என்பதை விட அதுதான் உண்மையாகும்.
ஆகையால் அந்த பிரச்சினையையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.
வருவது உயர்தர பரீட்சை. அடுத்து ஜனவரியில் பாடசாலைகள் ஆரம்பமாகும்.
எனவே அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பு ஆகும்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு
இலங்கை எனும் திருநாட்டின் ஆன்மீக வரலாற்றில் பல இடங்கள் சிவபூமியாகஇ இறைவனின் ஸந்நிதியோடு இணைந்துபோன புனித தலங்களாக கருதப்படுகின்றன. அதுபோன்று, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள குருமண் வெளி எனும் கிராமம் ஒரு பரிசுத்தமான பூமியாக எண்ணப்படுகிறது. சீர் பாத குலத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் ஸ்ரீ நாகதம்புரான் ஆலயங்கள், இப்பகுதியில் உள்ள ஆன்மீகத் தூண்களாக விளங்குகின்றன.
இவ்வாலயங்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா, ஆன்மீக உலகையே அதிர வைத்த அதிசயங்களுடன் நிறைந்தது. காலச் சுழற்சியில் அரிதாகவே நிகழும் இத்தகைய அற்புதங்கள், இறைவனின் செயற்பாடுகள் காலத்தின் எல்லைகளை கடந்தும் நிகழும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தன.
ஆலய வரலாற்றுப் பின்னணியை நோக்குகின்ற போது
கட்டுமாவடி கலிங்கநாடு திருவெற்றியூர் தலப்பாக்கட்டுப் பிராமண வம்சத்து குருமாராம்சீர்பாத குலத்தோர் புகழ் பூக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றதிருப்பதியாம் குருமண் வெளி எனும் கிராமம், தெய்வீக ஆசியுடன் அமைந்த, பண்பாட்டு பாரம்பரியத்தையும் ஆன்மீக ஒளியையும் உற்சாகமாக தாங்கி நிற்கும் ஒரு புண்ணிய நிலமாகும். கிராமத்தின் மேற்குத்திசையில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மாரியம்மன் ஆலயம் என்பன அருள்பாலித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை வடக்கே பத்திரகாளியம்மன் அதேபோல் கிழக்கே ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்இ ஸ்ரீநாக தம்பிரான் ஆலயங்கள் காலத்தின் சுவடுகளை தாங்கியதுடன், பக்தர்களுக்கு கருணை சுர ந்துஅருள் பாலிக்கும்இடங்களாக விளங்குகிறது.
ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயமானது நாராயணன்
தன் வாகனமான கருட பகவானுடன் நிலவின் மெல்லிய ஒளியிலும், பக்தியின் தீவிரமாகிய தீப ஒளிக்குள் விளங்கும் தெய்வீக பிம்பம் அடிக்கடி இவ்வாலய பிரதேசத்தில் உருவாகுவதும் கிராமத்தில் இறை அருள் நிறைந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றது.
அதேபோன்று, அருகிலுள்ள ஸ்ரீ நாகதம்புரான் ஆலயம், நாக சக்தியின் முழுமையான வடிவமாக கருதப்படும் நாக தேவர்கள் தங்கிய தலம் என எண்ணப்படுகிறது. பசுமை நிறைந்த குளங்களும், நாக புட்பங்களும் சூழ்ந்த இந்த ஆலயம்இ பண்டைய நாக நாடு மரபுகளின் பசுமைத் தடம் போல் விளங்குகிறது.
இக்கிராமத்தில் புகழ் பூத்து விளங்குகின்ற அற்புதங்கள் பல நிறைந்த ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் 28 6 2025 அன்று ஆரம்பமாகி மிக விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பல்வேறுபட்ட அற்புதங்களை மக்கள் கண்ணூடாக கண்டு கழித்தது கிராமத்தின் தெய்வ சக்தி நிறைந்த தன்மையை எடுத்துக்காட்டுகின்றதுஅந்த வகையில் மகா கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்ற வேளையில் இவ்வாலயத்தில் நிகழ்ந்த அதிசயங்களை பின்வரும் விடயங்கள் ஊடாக நோக்குவோம்
இக் கும்பாபிஷேக விழா, பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட நீடித்த ஒரு பாகவத அனுபவமாக அமைந்தது. நாட்டின் பல பாகங்களிலிருந்து திருந்தொண்டர்கள், வேத மந்திர சத்தங்களோடு சன்னிதிக்கு வந்தனர். வேதிகளின் முழக்கம், பஜனைகளின் இசை, திருவிழா பல்லக்கு ஊர்வலங்கள் ஆகியவை பக்தர்களை பரவச நிலையில் அழைத்தன.
கும்பாபிஷேகத்தின்போது,சீதேவி பூதேவி ஆகிய அம்மை களுக்கும் பெருமாளுக்கும் விதிக்கிணங்க திருக்குட மூர்த்திகள் அமைக்கப்பட்டு, தூய நீருடன், வேத மந்திரங்களோடு கலசபூரணங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தநிகழ்வில் பங்கேற்ற அனைவரும் உணர்ந்த அந்த ஆனந்த அனுபவம்இ வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவிற்கு உயர்ந்தது.
அந்த வகையில்
கருட பகவானின் வானதிசை அற்புதம்
மகாவிஷ்ணு ஆலயத்தில் குடமுழுக்கு நிகழ்வின் முரசம் ஒலித்த தருணத்தில், திடீரென வானில் வட்டமிட்டபடி ஒரு தீவிர ஒளிக்கதிருடன் கருட பிம்பம் தோன்றியது. அது மெல்ல ஆலயத்தின் விமானத்தில் அமர்ந்தது போலும்இ பின் மறைந்து விட்டது.
இந்த நிகழ்வை நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேரில் பார்த்ததோடுஇ சிலர் தங்களின் கைபேசிகளில் அதை படம் பிடித்திருந்தனர். அந்தக் காட்சிஇ ஒரு சாதாரண பறவை அல்ல என்பதையும்இ அதில் இருந்த ஒளிக்கதிரும் வடிவ விளக்கமும்இ கருட பகவானின் தெய்வீக திருவுருவம் என்பதை உறுதி செய்தன.,
இந்த நிகழ்வு, விஷ்ணுபக்தர்களின் மனங்களில் ஆழ்ந்த அன்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. சிலர் அந்த தருணத்தில் கண்களில் தானாக கண்ணீர் வருவதாகவும், சிலர் சிறப்பான திருவிழாவின் பாதிப்பில் மயக்கமடைந்ததாகவும் தெரிவித்தனர்.
மற்றும்இதன் பின்பு நடைபெற்ற ஸ்ரீ நாகதம்புரான் ஆலய குடமுழுக்கு நிகழ்வின் போது, மிகவும் அதிசயமான இன்னொரு நிகழ்வு நடந்தது. கலசநீரை மூர்த்திக்கு அர்ப்பணிக்கும் நேரத்தில், ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள நாகஸ்தானம் பகுதியில் இரு நாகங்கள் தோன்றின.
அவை ஒரு சில நொடிகள் தோன்றிஇ பின்னர் சாமியார்களாலும்இ பக்தர்களாலும் 'நாக தேவர்கள் வந்திருக்கிறார்கள்!' என கூச்சல் எழுந்தது. அந்த நாகங்கள் அமைதியாக அருகில் உள்ள மரத்தடியில் நுழைந்து மறைந்தன. இது பிறவியிலே அரிதாகக் காணப்படும் தெய்வீக சாட்சி என்று உணர்ந்த அனைவரும் நிலைதவறியபடி நமஸ்காரம் செய்தனர்.மற்றும்
அன்பும் அனுபவமும் உருக இது பற்றி பக்தர்கள் உரைத்த உணர்வுகள்மேலானது
இந்த நிகழ்வுகளுக்கு பின், பக்தர்களிடையே ஆன்மீக உற்சாகம் எழுச்சி பெற்றது. என சிலர்கூறினார்கள்அவற்றுள் சில கருத்துக்களாக
'நான் இந்த நேரத்தில் இருந்தது என் வாழ்க்கையின் பெரிய பாக்கியம்.'
'கருட பகவான் வானத்தில் தோன்றியதும் என் உடல் சிலிர்த்தது.'
'இது வரலாற்றில் அரிதான நிகழ்வு – நாக தேவதைகள் நேரில் வந்ததை நாங்கள் கண்டோம்!'
இவ்வாறெல்லாம்
பிறர் பேசியதுஇ இந்த கும்பாபிஷேக நிகழ்வின் போது ஏற்பட்ட அற்புதங்கள், ஒரு தர்ம நிலைப்பாட்டுக்கு உருவான ஒரு சாட்சி எனவே கருதப்பட்டது.
அதிசயங்களின் பொருள் மற்றும் நவீன கால உணர்வியல்என்பனவும் இந்நிகழ்வை உண்மையான பக்தி அனுபவம் என உறுதிப்படுத்தி கூறுகிறது அந்த வகையில்
ஆன்மீகம் என்பது காலங்களைக் கடந்து உருக்குலைந்த உணர்வாக இல்லாமல் தொழில்நுட்ப உலகிலும் மீளாய்வுக்குட்பட்ட உண்மையாக இருக்கிறது. வானில் கருட பகவான் தோன்றிய நிகழ்வும், நாகங்கள் தோன்றிய தருணமும்,சிலரால் 'மாயை', 'அவதான பிழை' எனக் கருதப்பட்டது. ஆனால் நிகழ்வின் நேர்மையான சாட்சிகள், காணொளிகள்இ மற்றும் அந்த தருணத்தில் ஏற்பட்ட ஆன்மீக அதிர்வுகள், இவை அனைத்தும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது, அதனை ஒரு தெய்வீக செயலாக்கம் என உறுதிபடுத்துகின்றன.என்று இக்கு கும்பாபிஷேகத்தை தலைமை தாங்கி நடாத்திய இவ்வாலயத்தின் பிரதம குருவும் 50 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித ஊதியமும் எதிர்பார்க்காமல் இவ்வாலயத்துக்காக த ன்னையே அர்ப்பணித்த வணக்கத்துக்குரிய சிவஸ்ரீ திரு வராகமுத்து யோகராஜா குருக்கள் அவர்களும் அவருடைய இரு புதல்வர்களான சிவஸ்ரீ யோகராஜாருத்திரன் ஷர்மாசிவ ஸ்ரீ ஜோகராஜா சனாதனன் சர்மா ஆகிய இவ்வாலயத்தின் குருமார்களும் எடுத்துரைத்தது எல்லோர் மனதிலும் எம் பெருமானின் பக்தி பெருக்கை ஏற்படுத்தியது.
குருமன் வெளி கிராமம்,இம்மாபெரும் கும்பாபிஷேக நிகழ்வினால் மேலும் புகழ்பெற்றது. இந்த தெய்வீக நிகழ்வுகள்மனித இனம் தங்கள் பாவங்களை அகற்றி, தங்கள் உள்ளத்தை தூய்மைப்படுத்தி, இறைவனை அடைய வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறான ஒரு அரிய கும்பாபிஷேக நிகழ்வில் நிகழ்ந்த அதிசயங்கள், எத்தனை நூற்றாண்டுகளாகவே ஆன்மீக வழிபாட்டின் அடையாளமாகவும், இறைவனின் அற்புதங்களை நமக்குள் உணர்த்தும் உயர்ந்த அச்சமுள்ள அன்பின் அழைப்பாகவும் திகழுகின்றன.
அன்பஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ நாகதம்பிரான் பக்தர்களே இம்மகத்தான கும்பாபிஷேக நிகழ்வில் தங்களால் கலந்து கொள்ள முடியாமல் போயிருந்தால் கூட தற்பொழுது மண்டலபிஷேகம் 48 நாட்களுக்கு மிக விமர்சையாக அற்புதமான முறையில் அன்னதானங்கள் அலங்கார நிகழ்வுகள் அன்பு நிறை பேச்சுக்கள் பிரசங்கங்கள் மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் என்பன இடம்பெற்று மண்டலாகு சிகத்தை சிறப்பித்துக் கொண்டிருக்கின்றன எனவே இம்மண்டலம் சேகத்தில் கலந்து கொண்டு எம் பெருமானின் நேரடி தரிசனத்தை கண்டு களிப்பதோடு தங்களுடைய சஞ்சித வினையிலிருந்து தானாக ஈடேற்றம் வருமாறு அன்புடனும் அரவணைப்புடனும் ஆதரவுடன் இந்து பெரும் பெருமக்களை கேட்டுக் கொள்கின்றனர்குறுமண்வெளிஆதிசேடன் கலைக்கழகத்தினரும் ஆலய தொண்டர்களும்
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ நாகதம்புரான் திருவடிகள் நமக்கெல்லாம் துணை புரியட்டு
சுபம்
சோ .செல்வம்(அதிபர்)
மட்ஃ பட்ஃ குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம்
குருமண்வெளி.
நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம்.
ஒன்றாக பள்ளி சென்று வீடு திரும்பி, மாலையில் ஒன்று கூடி விளையாடி மகிழ்ந்திருந்த சகபாடி சூழல் நம் தலைமுறையோடு முடிவு கண்டு விட்டது. கல்வியின் அடிப்படை தனிமனித நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அந்நடத்தை ஒரு சமூக வெளிப்பாடாகவே அமைய வேண்டும். ஆனால் இன்றைய நம் கல்வி முறைமை எந்த அளவிற்கு சமூகமய தலைமுறையொன்றை உருவாக்குகிறது என்ற வினா இக்கட்டுரைக்கான அடிப்படை எனக் கொள்வோம். பெற்றோர், குடும்பம், ஆசிரியர், பாடசாலை என்ற கட்டமைப்பை கடந்து பிள்ளைகளை சமூக மயப்படுத்துவதில் சம வயது சகபாடிகளின் பங்கு பெருந்திரளானது என்பதே உண்மை.
திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை(18) நடைபெறும்.
(சுமன்)
இவ்விஜயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா உட்பட கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச செயலாளர், வலயக் கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லையாயினு
இரராணுவம் தற்போது அந்தப் பாடசாலை கட்டிடங்கள் அடங்கிய 2.9 ஏக்கர் நிலப்பரப்பைப் பாவிப்பதற்கு மேலதிகமாக அரச காணி 5 ஏக்கரையும் பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே பாடசாலைக்குரிய கட்டிடம் இருக்கும் காணியையும், மைதானத்தையும் விடுத்து ஏனைய 5 ஏக்கரையும் பாவிப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கபப்படாதததையடுத்து அவர்கள் பாடசாலைக்குரிய காணி, மற்றும் கட்டிடங்களை விடுவிக்கும் படியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு காணி விடுவிப்புக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் கல்வியறிவை ஊட்டும் நோக்குடன் கிராம்புற ங்களில் திறன் வகுப்பறைகளை தாபிக்கப்படுகின்றது - வன்னி ஹோப் பணிப்பாளர் எம். பாரிஸ்
கல்வி அமைச்சின் கலைத்திட்ட மாறுபாடுகளுக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கையில் பல்வேறு கிராம்புர பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை தாபித்து அதன் மூலம் எதிர்கால சந்ததியினரின் தரமானதும் தொழிநுட்பத்துடன் கூடியதுமான கல்வியை வழங்குவதே வன்னி ஹோபின் நோக்கமாகும் என வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ. எம். பாரிஸ் தெரிவித்தாா்.
சம்மாந்துறைக் கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி விவேகானந்தா மகாவித்தியத்தில் திறன் (ஸ்ர்மாட்) வகுப்பறை ஒன்று செவ்வாய்கிழமை(20.06.2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இநத் நிகழ்வில் பிரதம அதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டர்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வன்னி ஹோப் நிறுவனம் அவுஸ்ரேலியாலைத் தலமையமாகக் கொண்டு இயங்கினாலும் இலங்கையில் பின்தங்கிய கிராமங்களில் பல்வேறு வகையான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி சா்ந்த திட்டங்களை இன,மத. பிரதேச வேறுபாடின்றி வழங்கி வருகின்றது. விசேடமாக கல்வி சாா்ர்நத விடயங்களில் வன்னி ஹோப் நிறுவனம் கூடுதல் அவதானிப்புகளை செய்து திட்டங்களை அமலாக்கி வருகின்றது. வறுமைகை் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மாதாந்த புலமைப் பரிசில் பண உதவிகளும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகைகளும், அறநெறி மற்றும் முன்பள்ளி சிறாா்களுக்கு சத்துணவுத் திட்டங்கள், கிராமியப்புர பாடசாலைகளுக்கு திறன்வகுப்பறை மற்றும் கணினிக் கூடங்கள் நிறுவுதல், மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் போன்ற பல கல்வி நலன்சாா் திட்டங்களில் வன்னி ஹோப் ஈடுபட்டு வருகின்றது. இதன் மூலம் சிறந்ததொரு மாணவ சமூகத்தினை உருவாக்கவும், சிறப்பான தொழில் சாா் இளைஞர்களை உருவாக்கவுமே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இடரை்பாடுகளுக்கு மத்தியில் கற்றல் இடர்பாடுகளை மாணவர்கள் எதிர்நோக்கி தங்களுடைய கல்வி நடவடிக்கையை பாதிக்காது அவர்களின் கற்றல் நடவவடிக்கை தங்குதடையின்றி செல்ல வேண்டும் என்ற அவா எமக்குள்ளது. வறுமையைக் காட்டி கல்வியை இடை நடுவே நிறுத்தி விடாமல் அவை தொடர்ந்தும் முன்செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் வன்னி ஹோப் நிறுவனம் கல்வி சாா் திட்டங்களில் கூடுதல் அவதானிப்பை செலுத்தி அதிக பணத்தினை இது போன்ற திட்டங்களுக்கு செலவு செய்கின்றது. என்று தனது உரையில் குறிப்பிட்டாா்.
அவுஸ்ரேலியாவிலுள்ள அப்பாடசாலையின் முன்னாள் அதிபர் வேலுப்பிள்ளை குடும்பத்தினரதும், மற்றும் அமெரிக்காவிலுள்ள நல்லையா பவுண்டேனசினதும் முழு நிதி அனுசரணையில் வன்னிஹோப் இலங்கை அலுவலகத்தினால் இதந்த திறன்வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு இலெட்சத்திற்கு அதிகமான நிதிப் பங்களிப்பில் இந்த ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வித்தியாலய அதிபர் எம்.தருமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாஸீர் அறபாத் முகைடீன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி.பரமதாயாளன், நிதி வழங்குனர் சார்பில் அப்பாடசாலையின் முன்னாள் அதிபரின் துணைவியார் திருமதி. வேலுப்பிள்ளை, மற்றும் வன்னிஹோப் நிறுவனத்தின் இணைப்பாளர்களான எஸ்.ரேகா, ஆர்.கணேசமூர்த்தி, எம்.யு.முகமட்.வஸீம், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர் என்பதுடன் குறித்த கிராமப் பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் கல்வியைத் தொடர்வதற்கு உதவி செய்த வன்னிஹோப் நிறுவனத்திற்கு இதன்போது பாடசாலைச் சமூகம் தமது நன்றியறிதலைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - வ.சக்திவேல்













.jpeg)
.jpeg)
.jpeg)






.jpeg)





