இலங்கை எனும் திருநாட்டின் ஆன்மீக வரலாற்றில் பல இடங்கள் சிவபூமியாகஇ இறைவனின் ஸந்நிதியோடு இணைந்துபோன புனித தலங்களாக கருதப்படுகின்றன. அதுபோன்று, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள குருமண் வெளி எனும் கிராமம் ஒரு பரிசுத்தமான பூமியாக எண்ணப்படுகிறது. சீர் பாத குலத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் ஸ்ரீ நாகதம்புரான் ஆலயங்கள், இப்பகுதியில் உள்ள ஆன்மீகத் தூண்களாக விளங்குகின்றன.
இவ்வாலயங்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா, ஆன்மீக உலகையே அதிர வைத்த அதிசயங்களுடன் நிறைந்தது. காலச் சுழற்சியில் அரிதாகவே நிகழும் இத்தகைய அற்புதங்கள், இறைவனின் செயற்பாடுகள் காலத்தின் எல்லைகளை கடந்தும் நிகழும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தன.
ஆலய வரலாற்றுப் பின்னணியை நோக்குகின்ற போது
கட்டுமாவடி கலிங்கநாடு திருவெற்றியூர் தலப்பாக்கட்டுப் பிராமண வம்சத்து குருமாராம்சீர்பாத குலத்தோர் புகழ் பூக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றதிருப்பதியாம் குருமண் வெளி எனும் கிராமம், தெய்வீக ஆசியுடன் அமைந்த, பண்பாட்டு பாரம்பரியத்தையும் ஆன்மீக ஒளியையும் உற்சாகமாக தாங்கி நிற்கும் ஒரு புண்ணிய நிலமாகும். கிராமத்தின் மேற்குத்திசையில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மாரியம்மன் ஆலயம் என்பன அருள்பாலித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை வடக்கே பத்திரகாளியம்மன் அதேபோல் கிழக்கே ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்இ ஸ்ரீநாக தம்பிரான் ஆலயங்கள் காலத்தின் சுவடுகளை தாங்கியதுடன், பக்தர்களுக்கு கருணை சுர ந்துஅருள் பாலிக்கும்இடங்களாக விளங்குகிறது.
ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயமானது நாராயணன்
தன் வாகனமான கருட பகவானுடன் நிலவின் மெல்லிய ஒளியிலும், பக்தியின் தீவிரமாகிய தீப ஒளிக்குள் விளங்கும் தெய்வீக பிம்பம் அடிக்கடி இவ்வாலய பிரதேசத்தில் உருவாகுவதும் கிராமத்தில் இறை அருள் நிறைந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றது.
அதேபோன்று, அருகிலுள்ள ஸ்ரீ நாகதம்புரான் ஆலயம், நாக சக்தியின் முழுமையான வடிவமாக கருதப்படும் நாக தேவர்கள் தங்கிய தலம் என எண்ணப்படுகிறது. பசுமை நிறைந்த குளங்களும், நாக புட்பங்களும் சூழ்ந்த இந்த ஆலயம்இ பண்டைய நாக நாடு மரபுகளின் பசுமைத் தடம் போல் விளங்குகிறது.
இக்கிராமத்தில் புகழ் பூத்து விளங்குகின்ற அற்புதங்கள் பல நிறைந்த ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் 28 6 2025 அன்று ஆரம்பமாகி மிக விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பல்வேறுபட்ட அற்புதங்களை மக்கள் கண்ணூடாக கண்டு கழித்தது கிராமத்தின் தெய்வ சக்தி நிறைந்த தன்மையை எடுத்துக்காட்டுகின்றதுஅந்த வகையில் மகா கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்ற வேளையில் இவ்வாலயத்தில் நிகழ்ந்த அதிசயங்களை பின்வரும் விடயங்கள் ஊடாக நோக்குவோம்
இக் கும்பாபிஷேக விழா, பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட நீடித்த ஒரு பாகவத அனுபவமாக அமைந்தது. நாட்டின் பல பாகங்களிலிருந்து திருந்தொண்டர்கள், வேத மந்திர சத்தங்களோடு சன்னிதிக்கு வந்தனர். வேதிகளின் முழக்கம், பஜனைகளின் இசை, திருவிழா பல்லக்கு ஊர்வலங்கள் ஆகியவை பக்தர்களை பரவச நிலையில் அழைத்தன.
கும்பாபிஷேகத்தின்போது,சீதேவி பூதேவி ஆகிய அம்மை களுக்கும் பெருமாளுக்கும் விதிக்கிணங்க திருக்குட மூர்த்திகள் அமைக்கப்பட்டு, தூய நீருடன், வேத மந்திரங்களோடு கலசபூரணங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தநிகழ்வில் பங்கேற்ற அனைவரும் உணர்ந்த அந்த ஆனந்த அனுபவம்இ வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவிற்கு உயர்ந்தது.
அந்த வகையில்
கருட பகவானின் வானதிசை அற்புதம்
மகாவிஷ்ணு ஆலயத்தில் குடமுழுக்கு நிகழ்வின் முரசம் ஒலித்த தருணத்தில், திடீரென வானில் வட்டமிட்டபடி ஒரு தீவிர ஒளிக்கதிருடன் கருட பிம்பம் தோன்றியது. அது மெல்ல ஆலயத்தின் விமானத்தில் அமர்ந்தது போலும்இ பின் மறைந்து விட்டது.
இந்த நிகழ்வை நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேரில் பார்த்ததோடுஇ சிலர் தங்களின் கைபேசிகளில் அதை படம் பிடித்திருந்தனர். அந்தக் காட்சிஇ ஒரு சாதாரண பறவை அல்ல என்பதையும்இ அதில் இருந்த ஒளிக்கதிரும் வடிவ விளக்கமும்இ கருட பகவானின் தெய்வீக திருவுருவம் என்பதை உறுதி செய்தன.,
இந்த நிகழ்வு, விஷ்ணுபக்தர்களின் மனங்களில் ஆழ்ந்த அன்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. சிலர் அந்த தருணத்தில் கண்களில் தானாக கண்ணீர் வருவதாகவும், சிலர் சிறப்பான திருவிழாவின் பாதிப்பில் மயக்கமடைந்ததாகவும் தெரிவித்தனர்.
மற்றும்இதன் பின்பு நடைபெற்ற ஸ்ரீ நாகதம்புரான் ஆலய குடமுழுக்கு நிகழ்வின் போது, மிகவும் அதிசயமான இன்னொரு நிகழ்வு நடந்தது. கலசநீரை மூர்த்திக்கு அர்ப்பணிக்கும் நேரத்தில், ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள நாகஸ்தானம் பகுதியில் இரு நாகங்கள் தோன்றின.
அவை ஒரு சில நொடிகள் தோன்றிஇ பின்னர் சாமியார்களாலும்இ பக்தர்களாலும் 'நாக தேவர்கள் வந்திருக்கிறார்கள்!' என கூச்சல் எழுந்தது. அந்த நாகங்கள் அமைதியாக அருகில் உள்ள மரத்தடியில் நுழைந்து மறைந்தன. இது பிறவியிலே அரிதாகக் காணப்படும் தெய்வீக சாட்சி என்று உணர்ந்த அனைவரும் நிலைதவறியபடி நமஸ்காரம் செய்தனர்.மற்றும்
அன்பும் அனுபவமும் உருக இது பற்றி பக்தர்கள் உரைத்த உணர்வுகள்மேலானது
இந்த நிகழ்வுகளுக்கு பின், பக்தர்களிடையே ஆன்மீக உற்சாகம் எழுச்சி பெற்றது. என சிலர்கூறினார்கள்அவற்றுள் சில கருத்துக்களாக
'நான் இந்த நேரத்தில் இருந்தது என் வாழ்க்கையின் பெரிய பாக்கியம்.'
'கருட பகவான் வானத்தில் தோன்றியதும் என் உடல் சிலிர்த்தது.'
'இது வரலாற்றில் அரிதான நிகழ்வு – நாக தேவதைகள் நேரில் வந்ததை நாங்கள் கண்டோம்!'
இவ்வாறெல்லாம்
பிறர் பேசியதுஇ இந்த கும்பாபிஷேக நிகழ்வின் போது ஏற்பட்ட அற்புதங்கள், ஒரு தர்ம நிலைப்பாட்டுக்கு உருவான ஒரு சாட்சி எனவே கருதப்பட்டது.
அதிசயங்களின் பொருள் மற்றும் நவீன கால உணர்வியல்என்பனவும் இந்நிகழ்வை உண்மையான பக்தி அனுபவம் என உறுதிப்படுத்தி கூறுகிறது அந்த வகையில்
ஆன்மீகம் என்பது காலங்களைக் கடந்து உருக்குலைந்த உணர்வாக இல்லாமல் தொழில்நுட்ப உலகிலும் மீளாய்வுக்குட்பட்ட உண்மையாக இருக்கிறது. வானில் கருட பகவான் தோன்றிய நிகழ்வும், நாகங்கள் தோன்றிய தருணமும்,சிலரால் 'மாயை', 'அவதான பிழை' எனக் கருதப்பட்டது. ஆனால் நிகழ்வின் நேர்மையான சாட்சிகள், காணொளிகள்இ மற்றும் அந்த தருணத்தில் ஏற்பட்ட ஆன்மீக அதிர்வுகள், இவை அனைத்தும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது, அதனை ஒரு தெய்வீக செயலாக்கம் என உறுதிபடுத்துகின்றன.என்று இக்கு கும்பாபிஷேகத்தை தலைமை தாங்கி நடாத்திய இவ்வாலயத்தின் பிரதம குருவும் 50 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித ஊதியமும் எதிர்பார்க்காமல் இவ்வாலயத்துக்காக த ன்னையே அர்ப்பணித்த வணக்கத்துக்குரிய சிவஸ்ரீ திரு வராகமுத்து யோகராஜா குருக்கள் அவர்களும் அவருடைய இரு புதல்வர்களான சிவஸ்ரீ யோகராஜாருத்திரன் ஷர்மாசிவ ஸ்ரீ ஜோகராஜா சனாதனன் சர்மா ஆகிய இவ்வாலயத்தின் குருமார்களும் எடுத்துரைத்தது எல்லோர் மனதிலும் எம் பெருமானின் பக்தி பெருக்கை ஏற்படுத்தியது.
குருமன் வெளி கிராமம்,இம்மாபெரும் கும்பாபிஷேக நிகழ்வினால் மேலும் புகழ்பெற்றது. இந்த தெய்வீக நிகழ்வுகள்மனித இனம் தங்கள் பாவங்களை அகற்றி, தங்கள் உள்ளத்தை தூய்மைப்படுத்தி, இறைவனை அடைய வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறான ஒரு அரிய கும்பாபிஷேக நிகழ்வில் நிகழ்ந்த அதிசயங்கள், எத்தனை நூற்றாண்டுகளாகவே ஆன்மீக வழிபாட்டின் அடையாளமாகவும், இறைவனின் அற்புதங்களை நமக்குள் உணர்த்தும் உயர்ந்த அச்சமுள்ள அன்பின் அழைப்பாகவும் திகழுகின்றன.
அன்பஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ நாகதம்பிரான் பக்தர்களே இம்மகத்தான கும்பாபிஷேக நிகழ்வில் தங்களால் கலந்து கொள்ள முடியாமல் போயிருந்தால் கூட தற்பொழுது மண்டலபிஷேகம் 48 நாட்களுக்கு மிக விமர்சையாக அற்புதமான முறையில் அன்னதானங்கள் அலங்கார நிகழ்வுகள் அன்பு நிறை பேச்சுக்கள் பிரசங்கங்கள் மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் என்பன இடம்பெற்று மண்டலாகு சிகத்தை சிறப்பித்துக் கொண்டிருக்கின்றன எனவே இம்மண்டலம் சேகத்தில் கலந்து கொண்டு எம் பெருமானின் நேரடி தரிசனத்தை கண்டு களிப்பதோடு தங்களுடைய சஞ்சித வினையிலிருந்து தானாக ஈடேற்றம் வருமாறு அன்புடனும் அரவணைப்புடனும் ஆதரவுடன் இந்து பெரும் பெருமக்களை கேட்டுக் கொள்கின்றனர்குறுமண்வெளிஆதிசேடன் கலைக்கழகத்தினரும் ஆலய தொண்டர்களும்
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ நாகதம்புரான் திருவடிகள் நமக்கெல்லாம் துணை புரியட்டு
சுபம்
சோ .செல்வம்(அதிபர்)
மட்ஃ பட்ஃ குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம்
குருமண்வெளி.



Post A Comment:
0 comments so far,add yours