(வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய கொத்துப்பந்தல் புதுப்பிக்கும்
சடங்கு வழமை போல் யானைகளால் நேற்று முன்தினம்(25) நடைபெற்றது.
இச் சடங்கு ஆறாம் நாள் சடங்காக பண்டுதொட்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி, முருகன் ஆலயத்தின் கொத்துப்பந்தல் மரக்கிளைகளால் புதுப்பிக்கும் சடங்கும் இந்நாளில் நடைபெற்றது.
முன்னதாக
காட்டிலிருந்து வெட்டப்பட்ட மரக்கிளைகளை, வாசனா ஹஸ்திராஜய்யா தலைமையிலான
யானை வர்க்கம் சுமந்துவந்து, மரக்கிளைகளை மாணிக்க கங்கையில் கழுவும்.
கதிர்காம பஸ்நாயக்க நிலமே டிசான் குணசேகர சகிதம் மரக் கிளைகளை யானைகள் தும்பிக்கையால் சுமந்து கொண்டு வந்து கந்தனாலய பந்தலில் இடும்.
மாணிக்க கங்கையில் கழுவப்பட்ட கிளைகள் ஆலயத்திற்கு முன்பாக போடப்பட்டிருந்த பந்தலில் யானைகளின் மூலம் மாற்றம் செய்யப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours