நூருல் ஹுதா உமர்


நிந்தவூரில்  போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிரபலமான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில் நிந்தவூர் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நால்வர் சுமார் 275 மில்லிகிராம் போதைப் பொருளுடன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக சம்மந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே இரவில் நிந்தவூர் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான இராணுவத்தினரால் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 1135 மில்லிகிராம் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours