கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச சபையினால் மல்லிகைத்தீவு கிராம குடியிருப்பாளர்கான நீர்த்தாங்கிகள் வழங்கும் நிகழ்வு வள்ளுவர் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா கெளரவ அதிதியாகவும் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான என்.கோவிந்தசாமி, ஏ.சீ.எம்.சஹீல், கே.எல்.இன்பவதி, கே.குலமணி, கே.எல்.சிஹாமா, சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீட், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா, கிராம உத்தியோகத்தர் கே.பிரகாஸ், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





Post A Comment:
0 comments so far,add yours