நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை வீதியில் தோணாவைக் கடந்து அடுத்த வீதிக்கு செல்வதற்கு அல் - அமீன் சமூக அபிவிருத்தி அமைப்பினால் நிர்மாணிக்கபட்ட பாலம் கடந்த ஆண்டு மே மாதம் (2020.05.20) கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவு அகற்றும் உழவு இயந்திரம் இப்பாலத்தின் ஊடாகச் சென்று குடைசாய்ந்ததால் பாலம் உடைந்தது.

மக்களின் போக்குவரத்துக்கு அவசியமான இப்பாலம் ஒரு வருடம் கடந்தும் இதுவரை திருத்தப்படாமல் உடைந்தபோது இருந்த அதே நிலையிலையே இருப்பதாகவும், இதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.சம்பந்தப்பட்டவர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என மக்களால் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours