நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நிர்வாகத்தின் கீழுள்ள சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம்.பைசல் தலைமையில் வர்த்தக நிலையங்களுக்கு இரவு நேர களச் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
எதிர்வரும் காலம் ஹஜ்ஜூப் பெருநாள் என்பதனால் வர்த்தக நிலையங்களில் வியாபாரமானது சுகாதார வழிமுறைகள் மற்றும் அரசாங்க கொவிட்-19 சுற்று நிரூபனங்களுக்கு அமைய நடைபெறுகின்றதா என்பதனை அவதானிக்கும் வகையிலும் கொவிட்-19 கொரோனா வைரஸை சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியிலும் இந்த களப்பணி நடைபெற்று கொண்டு இருக்கின்றது என பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம்.பைசல் தெரிவித்தார்.



Post A Comment:
0 comments so far,add yours