துதி


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோணா வைரஸ் பரவல் காரணமாக போக்குவரத்து தடைப்படுத்தப்பட்டவேளை அன்றாட உணவுக்காக சிரமப்பட்ட  மக்களுக்கு  மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது


பேரவையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அகில இலங்கை இந்து மாமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவியை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கு வழங்கி வைத்தது. 

இதனடிப்படையில் கிரான்குளம், செட்டிபாளையம், களுவன்கேணி உட்பட்ட கிராமங்களுக்கு பேரவையினால் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

 பேரவையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் பேரவையின் செயலாளர் சா.மதிசுதன், பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம், பேரவையின் இணைப்பாளர் ச.விஜிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours