இராணுவ உடையை ஒத்த பொருட்களை பரல் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை - சவளக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சொறிக்கல்முனை வீரச்சோலை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரு வேறு வகையிலான இராணுவ உடைகள் அடங்கிய பொருட்கள் உட்பட 2 தோட்டாக்கள் மற்றும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பரல் மீட்கப்பட்ட பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் சவளக்கடை பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours