ஆசிரியர்கள் தடுப்பூசிக்காக தூர இடங்களுக்குச் செல்லத்தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவிட்டுக்கான தடுப்பூசி நாடுமுழுவதும் ஏற்றப்படும் நிலையில் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு அல்லது இன்னொரு மாகாணத்திற்குக் கடமைக்காகச் செல்வோர் தற்போதுள்ள சூழ்நிலையில் கடமைக்கே செல்லமுடியாதுள்ள நிலையில் உள்ளனர்.
அத்தோடு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் கடமைக்குச் செல்லவேண்டிய அவசியமும் இல்லாததால் தடுப்பூசிக்காகத் தூர இடங்களுக்குச் சென்று தடுப்பூசி ஏற்றிய பின்னர் நெடுந்தூர பயணம் மேற்கொள்வது தொடர்பாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர் தற்போது ஒதுக்கப்பட்ட ஊசிகள் முடிவடைந்துள்ளதாகவும் கிடைக்கும்வரை பொறுத்திருந்து அதனை தங்கள் பிரதேசங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours