(க.விஜயரெத்தினம்)
நீதிமன்றங்களின் கட்டட தொகுதிகளுக்குள் தேவையின்றி அதிகளவிலான பொதுமக்கள் கூட்டமாக நிற்பதற்கோ அல்லது உள்நுழையவோ அனுமதி இல்லை எனவும்,கிழக்கு மாகாணத்தில் இருந்து கொண்டு வழக்குகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணி பே.பிறேம்நாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற புதன்கிழமை (7)நண்பகல் 1.00 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அழைக்கப்படும் வழக்குகளுக்கு உரியவர்கள் நிதிமன்றத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வாறு வருபவர்கள் அவர்களின் வழக்குகளுக்காக சட்டத்தரணியிடம் தொலைபேசி மூலம் அறியப்படுத்தி சட்டத்தரணிகளால் வர சொல்லப்பட்டால் மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,மேலும், தாவரிப்பு வழக்குகள், அவசரமாக கூட்டப்பட வேண்டிய வழக்குகள் பிணை வழக்குகள், குடும்ப வன்முறைகள் சம்பந்தமான வழக்குகள் ஆகியன வழமையான முறைகளில் நடைபெறும் என்றும்,எனினும் குறித்த சகல வழக்குகளுக்கு வருகின்றவர்களும் முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என்றும், சட்டத்தரணிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு சம்பந்தமாக அறிந்து வருவதற்கு சொல்லப்பட்டால் மாத்திரமே வர வேண்டும் என்றும், பொதுமக்கள் கூடி இருப்பதற்கோ, அதிகளவானவர்கள் கூடி நிற்பதற்கோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல் ஆகிய முக்கிய சுகாதார நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும்தெரிவித்துள்ளார்.
நீதவான் நீதிமன்றங்களில் விளக்க வழக்குகள் அழைக்கப்படும் போது தற்போது நாட்டில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை காரணமாக வெளி மாகாணங்களில் இருந்து வர முடியாதவர்களுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட மாட்டாது எனவும், ஆனால் கிழக்கு மாகாணத்தில் இருந்து வழக்குகளுக்கு வராதவர்களுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்க சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours