(நூறுல் ஹுதா உமர்)
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சௌபாக்கியா வேலைத் திட்டத்தின் கீழ் " யாவருக்கும் மின்சாரம் " திட்டத்தினால் இலவச மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றது.
சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் , கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் ஏ.எம்.ஹைகல், சமுர்த்தி முகாமையாளர்களான யூ.எல். ஏ. ஜூனைதா, எஸ்.றிபாயா, ஏ.எம்.ஏ. கபூர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Post A Comment:
0 comments so far,add yours