(திருக்கோவில் மேலதிக நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

திருக்கோவில் பிரதேசத்தில் அதிக வேகத்தில் பயணிக்கும் கனரக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தக் கோரி மக்கள் பொலிசாருக்கு மனு

அம்பாரை திருக்கோவில் பொலிஸ் நிருவாக எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகளில் அதிக வேகத்தில் செல்லும் கனரக மற்றும் இதர வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தி பயணிக்குமாறு வாகன சாரதிகளை அறிவுறுத்துமாறு கோரி திருக்கோவில் பிரதேச பொது மக்கள் மனு ஒன்றினை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடம் வழங்கி வைத்துள்ளனர்.

இவ் கோரிக்கை மனுவை பிரதேச பொதுமக்கள் சார்பாக திருக்கோவில் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யோகராசா தனுஷாந் தலைமையில் பிரதேச இளைஞர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.திலகரெத்தினவிடம் கையளித்து இருந்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகளின் அங்கிகரிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் பாரஊர்திகள் செல்லுவதனால் வீதியில் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள் முதியோர்கள் மற்றும் பாதசாரிகள் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதால் இவ்வாறு பயணிக்கும் கனரக வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தி பெறுமதி மிக்க மனித உயிர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில் தான் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன்

திருக்கோவில் பிரதேசத்தில் கனரக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் கனரக வாகனத்தைப் பயன்படுத்தும் மணல் மற்றும் கற்குவாரி முதலாளிமார்களுடனும் கலந்துரையாடி இப் பிரச்சினைக்கு ஒரு தீர் பெற்று தருவதாகவும் உறுதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours