(காரைதீவு சகா)

பாகிஸ்தான் நாட்டு இலங்கை தூதுவராலயத்தின் இரண்டாவது செயலாளர்(அரசியல்) திருமதி ஆயிஷா அபூ பக்ர் பஹாட் நேற்று காரைதீவுக்கு விஜயம் செய்தார்.

முன்னதாக காரைதீவு பிரதேசசபைக்க விஜயம் செய்த அவர் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுடன் கலந்துரையாடலொன்று மேற்கொண்டிருந்தார்.
அதன்போது தமிழர்களும் முஸ்லிம்களும் இரண்டறக்கலந்துவாழும் காரைதீவுப் பிரதேசத்தின் தேவைகள் பற்றி விலாவாரியாக தவிசாளர் எடுத்துரைத்தார்.

செயலாளர் திருமதி பஹாட் கூறுகையில் நான் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதியாக வருகதைந்தாலும் உங்களது தேவைகளை பொதுவாகவே பார்க்கிறேன்.எமது நாட்டில் இந்துக்கள் வாழ்கிறார்கள்.அதற்கான அடையாளங்கள் இன்றும் பேணப்பட்டு வருகின்றன. எனவே முஸ்லிம்கள் எங்கவாழ்ந்தாலும் அங்குள்ள ஏனைய இனங்களுடன் ஒன்றாக அந்நியோள்யமாக வாழ்வதையே விரும்புகின்றோர். அதற்கமைய எமது உதவியென்பது தனியே ஒரு இனத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படமாட்டாது என்றார்.

பினன்ர் அவர் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லாரிக்கு விஜயம்செய்து அதிபர் ம.சுந்தரராஜன் குழுவினருடன் கலந்தரையாடினார்.
அதன்போது கல்வியமைச்சின்  உயராதிகாரி. எ.எம்.தாஜூதீன் உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours