(திருக்கோவில்  -எஸ்.கார்த்திகேசு)

திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தினால் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்.

அம்பாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தினால் கொவிட் 19 தாக்கம் காரணமாக தினக்கூலி பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு குருகுல ஆதீன பணிப்பாளர் இறைப்பணிச் செம்மல் கண.இராஜரெத்தினம் தலைமையில் விநாயகபுரம் குருகுல ஆதீன கனகசபா மண்டபத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.

இவ் உலர் உணவுப் பொதிகள் மெல்போன் சிவதொடர் நிலையத்தின் நிதி உதவியுடன் அம்பாரை மாவட்ட குருகுல ஆதீனத்தின் ஓருங்கிணைப்பில் சுமார் 100 தினக்கூலிக் குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் பிரதேசசபை உறுப்பினர்கள் குருகுல ஆதீன நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours