சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் நாவிதன்வெளிப் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனைப் பிரதேசத்தில் வாழும்  பொதுமக்களுக்கு உடுதுணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி இடம்பெற்றது.

இவ் உடுதுணியினை அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் கணக்காய்வாளர் நாகேந்திரன் ஊடகவியலாளர் சா.நடனசபேசன் பாண்டிருப்பு சலஞ்சஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டு இவ் உடுதுணிகளை வழங்கிவைத்தனர்.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் மற்றும் உதவிப் பொருளாளர் வி.பேரின்பராசா மற்றும் அங்கத்தவர்களான ரமேஸ்,வின்சன் ஆகியோர்களின் முயற்சியினாலும் அமைப்பின் தலைவர் பொருளாளர் மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடனும்  இவ் உடுதுணிகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours