திருக்கோவில் பிரதேச ஆதார வைத்திய சாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொவிட்19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமானது இன்றைய தினம்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கு.சுகுணன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


இன் சிகிச்சை நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.மேலும் இன் நிகழ்வானது திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையின் சிரேஷ்ர வைத்திய அதிகாரி  ஏ.பீ.மசூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் திருக்கோயில் வைத்தியசாலையின் சிரேஷ்ர வைத்திய அதிகாரி.மசூத், திருக்கோவில் பிரதேச பொதுசுகாதார வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன், கல்முனை பிராந்திய சுகாதார திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் மாகீர்த் மற்றும்  வைத்தியசாலை உத்தியோத்தர்கள் வைத்தியசாலை நிறுவாகத்தினர் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours