(திருக்கோவில் -எஸ்.கார்த்திகெசு)

திருக்கோவில் பிரதேசத்தில் கொவிட் மரணம் இரண்டாக அதிகரிப்பு
சுகாதார வழிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு கொவிட் செயலணி பொது மக்களிடம் கோரிக்கை மீறினால் சட்ட நடிவடிக்கை

திருக்கோவில் பிரதேசத்தில் இரண்டாவது கொவிட் மரணம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பிரதேச மட்ட கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழு அவசரமாகக் கூடி பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த தீர்மானிங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ் கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன் (11) பிற்பகல் வேளையில் இடம்பெற்று இருந்தன.

திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் 01 கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் 84 வயதுடைய ஆண் ஒருவர் கொவிட் காரணமாக மரணத்தைத் தொடர்ந்து பிரதேசத்தில் கொவிட் மரணம் இரண்டாக அதிகரித்ததைத் அடுத்து அவசரமாக கூடிய பிரதேச மட்ட கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழுக் கூட்டமானது பல்வேறு  பாதுகாப்பு தீர்மானங்களை தொடர்பாக ஆராய்ந்து இருந்தன.

அந்தவகையில் திருக்கோவில் பிரதேசத்தில் சுகாதார தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வெளிப் பிரதேசங்களில் இருந்து வருகின்ற நபர்கள் தொடர்பாக தவல்களை சேகரித்தல் தடுப்பூசி ஏற்றிக் கொண்டமைக்கான அட்டையை பரிசோதித்தல் ஆலய உற்சவங்கள் திருமண நிகழ்வகளை மிக குறைந்த எண்ணிக்கையான நபர்களுடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முன்னெடுத்தல்

பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களை தினமும் கண்காணித்தல் மற்றும் கொவிட் தொற்றாளர்களுக்காக திருக்கோவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு இருந்தன.

இவ்பிரதேச மட்ட கொவிட் 19 தடுப்பு செயலணிக் கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் மர்சூத் பிரதேச தவிசாளர் இ.வி.கமலராஜன் பொலிசார் இராணுவம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என கலந்து கொண்டு இருந்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours