இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 8 ஆவது சர்வதேச ஆய்வரங்கு கலாநிதி ஆர்.ஏ. சர்ஜுனின் ஒருங்கிணைப்பில் “இஸ்லாமிய மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக நம்பிக்கைசார்ந்த சமூக ஒத்திசைவை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளில் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிரின் தலைமையில் எதிர்வரும் புதன் கிழமை (04.08.2021) இணைய வழியில் நடைபெற உள்ளது.
இந்த சர்வதேச ஆய்வரங்கிற்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ள உள்ளதுடன் இவ்வாய்வரங்கின் தொடக்க நிகழ்வின் பிரதம பேச்சாளராக மலேசிய கெபங்ஸான் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி துணைப் பேராசிரியர் கலாநிதி அஹ்மத் ஸுனாவரி லோங் கலந்து சிறப்பிக்கிறார். இவ்வாய்வரங்கில் 86 ஆய்வுக் கட்டுரைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்படவிருக்கின்றன என்பது விஷேட அம்சமாகும் என ஆய்வரங்கின் செயலாளர் கலாநிதி எஸ். றிபா மஹ்ரூப் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours