(வி.ரி.சகாதேவராஜா)

உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொடிய கொரோனா இலங்கைத்தீவை விட்டு நீங்கவேண்டி, வரலாற்று பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தில் விசேட பூஜை நேற்று நடாத்தப்பட்டது.

மாத்தளை மாநகரசபையின் முதலாவது தமிழ் மேயரான சந்தனம் பிரகாஸ் ,நாட்டில் கொடியகொரொனா நீங்கவேண்டுமென நேர்த்திவைத்து இப்பூஜையை நடாத்த ஏற்பாடு செய்திருந்தார்.

உகந்தமலை முருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் இப்பூஜையை நடாத்திவைத்து மேயருக்கு அருளாசியும் ,காளாஞ்சியும் வழங்கினார்.

உரிய அனுமதியோடு ,சுகாதார முறைப்படி அறுவர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாத்தளை மாநகரசபை உறுப்பினர் ரி.மோகன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிறைவில், சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தொடர்பில் விசேட செய்தியையும் வெளியிட்டுரையாற்றினார்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours