(மட்டக்களப்பு விசேட நிருபர்)

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த மிகவும் வறுமை நிலையிலுள்ள 12 வய தையுடைய செல்வராசா சோபேஸ்நாத்தின் கண்பார்வை குறைபாட்டை சத்திர சிகிட்சை மூலம் நிவர்த்தி செய்வதற்கு தேவையான நிதி இன்று (20) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தனது 9 வயதில் கண்பார்வை குறைபாட்டை எதிர்நோக்கிய தரம் 7 இல் மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயின்றுவரும் குறித்த சிறுவனின் கண்பார்வைக்கான சத்திர சிகிட்சைக்கான நிதி தேவையேற்பட்ட போது, விடயத்தை அறிந்து கொண்ட அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் முன்னால் சிறுவர் பாதுகாப்பு மாவட்ட இணைப்பாளர் அ.கோடீஸ்வரனும் அவரது நண்பர்களும் இணைந்து 306,000 ரூபா நிதி உதவியினை அனுப்பிவைத்துள்ளனர்.

முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரனின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட்ட இக்கொடுப்பனவின் மூலம் சிறுவனுடைய சத்திர சிகிட்சையை மேற்கொள்வதுடன், அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக இந் நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் அ.நவேஸ்வரன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்த

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours