(மட்டக்களப்பு விசேட நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் விசேட வரலெட்சுமி பூசை நிகழ்வு இன்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம
ஜெயதீஸ்வர சர்மா குருக்களின்
தலைமையில் சிறப்பு வரலெட்சுமி பூசை நிகழ்வானது விசேட
தீபாராதனையுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
பௌர்ணமிக்கு முன்வருகின்ற வெள்ளிக்கிழமை வரும் இவ்விரதமானது சிவபெருமானே ஆணையிட்டு உமையம்மையார் உலகத்தின் நன்மை மற்றும் சௌபாக்கியத்தின் பொருட்டு கடைப்பிடித்துக் காட்டியதன் பயனாலேயே முருகப்பெருமான் அவதரித்ததாகவும், இவரது அவதாரத்தினால் துன்பங்கள் எப்படி நீங்கியதோ அதே போன்று வரலெட்சுமி விரதத்தை நாம் அனுஸ்ட்டிப்பதால் எம்மிடம் இருக்கின்ற தீமைகள் எல்லாம் நீங்கி சௌபாக்கியம் பிறந்திடும் என்று புராணங்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours