( நூருல் ஹுதா உமர், றிஸ்வான் சாலிஹு )
இவ்விழிப்புணர்வில் தற்காலத்தில் கடுமையான வீரியத்துடன் பரவும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பதாகை சகல இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் , பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை வலியுறுத்தும் ஸ்டிக்கர்களும் பொது போக்குவரத்து பஸ்களில் ஒட்டப்பட்டன .
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி , அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசீக் , அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் , அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ. காதர் , அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினரும் , முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான சிறாஜ் மஸ்ஹூர் , 241 இராணுவ படைப்பிரிவின் உயரதிகாரி , பொலிஸ் நிலைய உயரதிகாரி , அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் , அக்கரைப்பற்று ஜும்ஆ பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினர் , பிரதேச முக்கியஸ்த்தர்கள் , மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .
Post A Comment:
0 comments so far,add yours