இ.சுதாகரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலக நிருவாக எல்லைக்கு உட்பட்ட 35 கிராம கண்ணகி புரத்தில் மக்களின் குடியிருப்புக்களை யானைகள் இலக்குவைத்து சேதப்படுத்தும் அவலநிலை நடைபெற்றுள்ளது.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு மக்களின் குடியிருப்புக்கள் நோக்கி வருகை தந்திருந்த யானைகள் நடராசா சசிதரன் என்பவருடைய வீட்டினை முழுமையாக சேதப்படுத்தியது மாத்திரமல்லாது வீட்டுத்தோட்டத்தினையும் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

சம்பவம் நடைபெற்ற வீட்டினுள் நித்திரையில் உறங்கியவர்கள் சிறு காயங்களுடன் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளனர்.இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் யானைகளின் தாக்கம் தொடர்பாக முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours