செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி எம்கே.பேரின்பராஜா நேற்றுமுன்தினம் (07) கொரோணா நோய் தாக்கத்தால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார்.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் புகழ் பூத்த சிரேஷ்ட சட்டத்தரணியும். சமூக செயற்பாட்டாளரான இவர் கல்விப் புலத்தில் அதி சிறந்த ஆசிரியையும். புகழ்பூத்த பேசும் அதிபருமான திருமதி அன்னபூரணம் அம்மணியின் கணவராவார். இவர்களது இரண்டு புதல்வர்களும் எந்திரிகளாவர்.
கல்முனையில் சஞ்சீவன் கொலைவழக்கு உள்ளிட்ட பல மனிதஉரிமை வழக்குகளில் ஆஜராகி பிரபல்யமடைந்தவர்.

Post A Comment:
0 comments so far,add yours