மாளிகைக்காடு நிருபர்


காரைதீவு பிரதேச சபை த‌விசாள‌ர் கி.ஜ‌ய‌சிறிலுக்கு தொலைபேசி மூல‌ம் கொலை மிர‌ட்ட‌ல் விட‌ப்ப‌ட்ட‌தாக‌ அவ‌ர் சொல்லும் குற்ற‌ச்சாட்டை பொலிசார் விசாரிக்க‌ வேண்டும். இது ந‌வீன‌ கால‌ம். தொலைபேசியில் ஒருவ‌ர் தொட‌ர்பு கொண்டால் அந்த‌ தொலைபேசி இலக்கம் யாரின் பெய‌ரில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ளது என்ப‌தை ட்ரூகோல‌ர் காட்டும். ஒரு த‌விசாள‌ரின் கையில் உள்ள‌ போனில் நிச்ச‌ய‌ம் இது இருக்கும் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், அத்துட‌ன் கோல் ரெக்கோட‌ரும் இருக்கும். அத‌னால் பேசிய‌வ‌ரின் மிர‌ட்ட‌ல் குர‌லை வெளியிட‌ முடியும். ஆக‌வே காரைதீவு பிரதேச சபை த‌விசாள‌ர் கி.ஜ‌ய‌சிறில் மீது எந்த‌ சாத்தானாவ‌து உண்மையாக‌வே கொலை மிர‌ட்ட‌ல் விடுத்திருந்தால் அது க‌ண்ட‌ன‌த்துக்குரிய‌து. அவ‌ரை பொலிசார் கைது செய்ய‌ வேண்டும்.

அவ்வாறின்றி இத‌னை திசை திருப்புவ‌த‌ற்காக‌ காரைதீவு பிரதேச சபை த‌விசாள‌ர் கி.ஜ‌ய‌சிறில் பொய்யாக‌ சொல்கிறாரா என்ப‌தையும் பொலிசார் ஆராய்ந்து பொய்யாக‌ இருக்குமாயின் இது இன‌ முரண்பாட்டை  உண்டாக்க‌ இட்டுக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ செய்தி என்ப‌தால் காரைதீவு பிரதேச சபை த‌விசாள‌ர் கி.ஜ‌ய‌சிறில் கைது செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours