நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்பாரை மாவட்டமும் முடங்கியது.
காரைதீவு பிரதேச பிரதானவீதி வெறிச்சோடிக்காணப்பட்டது. அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருந்தன.
அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தினர் வீதிச்சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள நிலையில் வெளியில் நடமாடுகின்றவர்களை பரிசோதனைக்குட்படுத்தி வருகின்றனர். உரிய காரணமின்றி நடமாடுகின்றவர்களை எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு அனுப்பியும் வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours