அரச சேவையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என்று கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச நிறுவனங்கள் நாளை மறுதினம் முதல் வழமைக்குத் திரும்பவுள்ள நிலையில், அரச ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் இந்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போதே ஆசிரியர்கள் சேவைக்கு அழைக்கப்படுவர் என்றும் எனினும் பாடசாலைகளை திறப்பதற்கான அனுமதியை சுகாதார சேவைகள் பணிப்பாளரால் இதுவரை வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours