மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக கரடியானாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரடியனாறு - கூமாச்சோலை சந்தி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கோணேசப்பிள்ளை சிறிராம் ஜீவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று இரவு காட்டு யானைகள் ஊருக்குள் உட்புகுந்து தென்னை மரங்களை முறித்து நாசப்படுத்தியதுடன் அந்த பகுதியிலுள்ள ஒருவரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours