தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் மேலும் சில சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான அறிக்கையொன்று சுகாதார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள குறித்த அறிக்கையில் மேலும் 9 சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

  1. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்ட அவசர மற்றும் அத்தியாவசிய விடயங்களுக்காக நீதிமன்றம் செயற்படும்.
  2. தலைமை செயலாளர்கள்/ மாவட்ட செயலாளர்கள்/ பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாகாண சபைகள் அவர்களின் அத்தியாவசிய ஊழியர்கள் / அரசாங்க அதிபர் அலுவலகங்கள்/ பிரதி அரசாங்க அதிபர் அலுவலகங்கள்.
  3. அனைத்து ஏற்றுமதி/ இறக்குமதி தொடர்பான மற்றும் உள்ளூர் உற்பத்தித் தொழில்களைச் செயற்படுத்துவதற்கு குறைந்தபட்ச அத்தியாவசிய ஊழியர்கள்.
  4. ஊடகத்தின் குறைந்தபட்ச அத்தியாவசிய ஊழியர்கள் (அச்சு/ மின்னணு).
  5. விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்/ உரிமையாளர்கள் எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுவர்.
  6. அத்தியாவசிய கடைகளை திறப்பது (நாட்கள் மற்றும் நேரம்) மாவட்ட கோவிட் வழிகாட்டும் குழு முடிவு செய்யும்.
  7. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் செயற்பட தேவைப்படும் குறைந்தபட்ச அத்தியாவசிய ஊழியர்கள்.
  8. முதலீட்டு ஊக்குவிப்பு சபை/ ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் குறைந்தபட்ச அத்தியாவசிய ஊழியர்கள்.
  9. அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கான சம்பளத்தை நிறுவனத் தலைவரின் அனுமதி கடிதத்துடன் தயாரிக்க அவசியமான கணக்கியல் ஊழியர்கள். முடிந்தவரை ஒன்லைன் வங்கி மற்றும் கட்டண முறைகளை ஊக்குவிக்கவும்.

இதேவேளை இந்த அனைத்து பிரிவுகளும் கோவிட் - 19ஐ தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours