சம்மாந்துறை வலயத்திலுள்ள இறக்காமக்கோட்டத்தின் முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எ.மஜீட்(70) கொரோனாத் தொற்றுக்காரணமாக நேற்று மரணமானார்.
சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோhனத்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அங்குள்ள கொரோனவிசேடபிரிவில் சிகிச்சைபெற்றுவந்தார்.
இறக்காமத்தைச்சேர்ந்த மஜீட் இறக்காமம் பெரியபள்ளிவாசல் தலைவராகவும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தலைவராகவும் இருந்து சமயசேவையாற்றியதுடன் மேலும் பொதுநலசேவையாற்றியும் வந்திருந்தார்.
அவரது இழப்பையிட்டு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் உள்ளிட்ட கல்விசார் கல்விசாரா அணியினர் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்கள்.
அன்னார் சிபானா அர்சாத் ஆசிக் ஆகியோரின் தந்தையும் நீதவான் அஸ்வர் (அவுஸ்ரேலியா) அவர்களின் மாமனாரும் ஆவார்.
Post A Comment:
0 comments so far,add yours