மட்டக்களப்பு வவுனதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிப்பிமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டொன்று நேற்று (18) திகதி புதன்கிழமை இரவு 6.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
ஆயித்தியமலை பொலிசாரிற்கு கிடைத்த தகவலையடுத்து தாண்டியடி விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த கைக்குண்டை மீட்டுள்ளனர்.
கடந்த யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Post A Comment:
0 comments so far,add yours