(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு-கிரான்குளத்தில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் தெரிவித்தார்கள்.

இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் கிராமத்தில் சாயி பாவா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியிலே புதன்கிழமை (4)மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து ஆரையம்பதிக்கு உறவினர் ஒருவரின் வீட்டுக்கு விரைந்த மோட்டார் சைக்கிளும்,குருக்கள்மடத்திலிருந்து கிரான்குளத்தில் உள்ள தோட்டக்காணிக்கு விரைந்த இரு மோட்டார் சைக்கிளும் ஒரே பாதையில் பயணிக்கையில் பாதையை கடப்பதற்கு முற்படுகையில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனால் மோட்டார்சைக்கிளில் பயணித்த குருக்கள்மடத்தை சேர்ந்த எஸ்.பிரான்சிஸ்(வயது-43),ஆரையம்பதியைச் சேர்ந்த ம.ஸ்ரீகாந்(வயது-29)படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.குறித்த இருவருக்கும் கை,மார்பு,காலில் பலமாக அடிபட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து சம்பந்தமாக காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் விபத்தில் சேதமடைந்த இரு மோட்டார்சைக்கிளையும் மீட்டெடுத்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார்கள்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours