நாட்டில் இதுவரை இருபத்தி எட்டு வைத்தியசாலைகளுக்கு 8கோடி ருபா (806 லட்சம் ரூபாய்) செலவிலான மருத்துவ உபகரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களுக்கான இணைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தெரிவித்தார்.
இதுபற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களுக்கான இணைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் கூறுகையில்:
எனது வேண்டுகோளுக்கமைவாக இம்மருத்துவஉபகரணத்தொகுதி நேற்றும் நேற்றுமுன்தினமும் பாணமை மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
தொடர்ந்தும் எனது வேண்டுகோளுக்கிணங்க அம்பாறையில் காணப்படும் தமிழ் பிரதேசங்கள் ஆகிய திருக்கோவில், ஆலையடிவேம்பு, மல்வத்தை ,நாவிதன்வெளி, மத்தியமுகாம், காரைதீவு மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் காணப்படக்கூடிய வைத்தியசாலைகளுக்கு இது மாதிரியான அத்தியாவசிய வைத்திய உபகரணங்களை எதிர்வரும் நாட்களில் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருக்கிறார்.
அதற்கான முன்னாயத்தங்களை, நாளை முதல் ஆரம்பிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours