அமெரிக்க டொலரில் வரி செலுத்த இயலுமானோருக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக மத்திய வங்கி ஆளுநருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பாக கலந்துரையாடலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வெளிநாடுகளில் அமெரிக்க டொலரில் வாகனங்களை வாங்கி, அந்த வாகனத்துக்கு இலங்கையில் செலுத்த வேண்டிய வரியை அமெரிக்க டொலரில் செலுத்த ஒப்புக்கொள்வோர் எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.

இச்செயன்முறை குறித்து மேலும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours