(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


மட்டக்களப்பில் 88 வீதமானோருக்கு டெல்ரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் முடிவுகள் நேற்றுகிடைக்கப்பட்டுள்ளன. அதில் 49 மாதிரிகளில் 43 மாதிரிகள் டெல்ரா வேரியன்ட் ஆக அடையாளம் காணப்பட்டுள்ளது.  அத்தடன் 4 அல்பா வேரியன்ரும் இரண்டு மாதிரிகளுக்கு முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை. இதனடிப்படையில் 88 வீதமானவர்களுக்கு மட்டக்களப்பில் டெல்ரா வேரியன் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்ததுடன், நேற்றையதினம் மட்டக்களப்பு வவுனதீவில் 10 வயது சிறுவன் கொரோனாவிற்கு பலியாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours