(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்ட லங்கா சதோச மொத்த விற்பனை நிலையம் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன், சதோச வர்த்தக நிலையத்தின் ஊடாக மக்களுக்கு தேவையான அனைத்து விதமான அத்தியாவசிய தேவைக்கான பொருட்களையும் நிவாரண விலையில் வழங்கிவருகின்றனர்.அதற்கு அமைவாக மட்டக்களப்பு நகர் பகுதி மக்களிற்கு நிவாரண விலையில் சதோச ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தோச விற்பனை நிலையம் ஒன்று இன்று மட்டக்களப்பு கள்ளியங்காட்டு பகுதியில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் எஸ். சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை திறந்துவைத்தார்.
வாணிக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது மட்டக்களப்பு நகர் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் சதோச திறக்கப்பட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் நிவாரண விலையில் பெற்றுக்கொடுக்கப்படுமென வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கள்ளியங்காடு உணவுக் களஞ்சியசாலையில் சதோச விற்பனை நிலையமானது உதவி மாவட்ட செயலாளர் எஸ்.நவேஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பகுதி மக்களுக்கு சத்தோச விற்பனை நிலையம் இல்லாதிருந்த நீண்டகாலமாக குறை இதனூடாக தீர்த்து வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.தற்போதைய முடக்க காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் இதனூடாக பெற்றுக்கொள்ளமுடியும். மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,லங்காசதோச மொத்த விற்பனை நிலைய பணிப்பாளர் ஆனந்த பீரிஸ் சதோச விற்பனை நிலைய உயர் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







Post A Comment:
0 comments so far,add yours