அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய துறைநீலாவணையை சேர்ந்த என்.நவநீதராஜா லாகுகல பிரதேச செயலாளராக  கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் லாகுகல  பிரதேச செயலாளராக கடமையாற்றிய சந்தருவான் அனுருத்த, அம்பாறை பிரதேச செயலாளராக அண்மையில் இடமாற்றம் பெற்று சென்றதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் லாகுகல பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராகவும் நாவிதன்வெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே தற்போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours