(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

பசுமை செயற்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வின் ஒரு அங்கமாக நேற்று புதுக்குடியிருப்பு கடற்கரைப் பகுதியில் 200 பனைவிதைககள் நடப்பட்டதோடு , 100 விதைப்பந்துகளை வீசி எறியும் செயற்பாடும் இடம் பெற்றது.

ஹெல்ப் எவர் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இயற்கையின் மொழி அமைப்பும் இணைந்து இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹெல்ப் எவர் அமைப்பின் ஸ்தாபகர் கீர்த்தனன் அவர்களும் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்களும் இதில் பங்கேற்றதோடு , இயற்கையின் மொழி அமைப்பின் ஸ்தாபகர் திருமதி.காயத்ரி உதயகுமாரும் அவ்நிறுவன உறுப்பினர்களும் நிகழ்வில் சமூகமளித்து செயற்திட்டம் நிறைவேற முழுமையாக ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours